Oh Megame Oh Neram Poguthe Song Lyrics

ஓஓஓ...மேகமே... பாடல் வரிகள்

Chinna Chinna Aasaigal (1989)
Movie Name
Chinna Chinna Aasaigal (1989) (சின்ன சின்ன ஆசைகள்)
Music
Chandrabose
Singers
K. J. Yesudas, Lalitha Sagari
Lyrics
Pulamaipithan
ஆண் : ஓஓஓ...மேகமே...
பெண் : ஓஓஓ நேரம் போகுதே
ஆண் : நெடு நேரம் ஆயாச்சு
பெண் : பொழுதெல்லாம் போயாச்சு
ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண் : இதமாக தோளில் வந்து சாயல

ஆண் : ஓஓஓ...ஓஹோ மேகமே...
பெண் : ஓஓஓ நேரம் போகுதே.....

ஆண் : நெனப்பெல்லாம் உம் மேலே
நெசந்தான்டி அம்மாளே
தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன்
பெண் : தெரியாதா உன் வேலை
குறியெல்லாம் என் மேலே
எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா

ஆண் : பரிகாசம் பண்ணாதே
பதிலேதும் சொல்லாதே
பசியாற நீ கொஞ்சம் வா....ஒஹோஹ்...
பெண் : ஓஓஓ...மேகமே...
ஆண் : ஓஓஓ நேரம் போகுதே

பெண் : இடுப்போரம் கைப்போட்டு இது என்ன தாலாட்டு
என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா
ஆண் : அடியாத்தி நாளைக்கு வரப்போகும் பிள்ளைக்கு
தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா

பெண் : ஒரு பிள்ளை நீயாச்சு ஒரு பிள்ளை நானாச்சு
இது போதும் இப்போது வா.....ஓஓஹோஹ்...

ஆண் : ஓஓஓ...மேகமே...
பெண் : ஓஓஓ நேரம் போகுதே
ஆண் : நெடு நேரம் ஆயாச்சு
பெண் : பொழுதெல்லாம் போயாச்சு
ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண் : இதமாக தோளில் வந்து சாயல
இருவரும் : பாபபபப்ப்பாபா...பபபபாபபபபா..