Oru Pattam poochi Song Lyrics
ஒரு பட்டாம்பூச்சி பாடல் வரிகள்
- Movie Name
- Poove Ilam Poove (1987) (பூவே இளம் பூவே)
- Music
- Amal Dev
- Singers
- S. P. Sailaja
- Lyrics
- Vaali
ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும்
தொட்டாச்சிணுங்கி தானா
அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன்
துள்ளும் வால மீனா
இங்கு கண்ணாலம் பண்ணாத
பொண்ணொண்ணு தவிக்கிது மாமா
ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும்
தொட்டாச்சிணுங்கி தானா
அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன்
துள்ளும் வால மீனா
இங்கு கண்ணாலம் பண்ணாத
பொண்ணொண்ணு தவிக்கிது மாமா..
ஜல்லி காளைங்கள வளைச்சு
மேல தாவித் தாவித்தான் புடிச்சு
ஏறி அடக்குகிற வயசு
இப்ப எதுக்கு நடுங்குது மனசு
வந்தும் வராமலும் பட்டும் படாமலும்
வெலகி இருக்கலாமா
காதல் பொல்லாதது காவல் இல்லாதது
புடிச்ச புடியை விடுமா மாமா
உனக்கும் எனக்கும் நெருக்கம் இருக்குவரை
ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும்
தொட்டாச்சிணுங்கி தானா
அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன்
துள்ளும் வால மீனா
இங்கு கண்ணாலம் பண்ணாத
பொண்ணொண்ணு தவிக்கிது மாமா
ஊத்து மீறத்தான் நாத்து மேல
ஊஞ்சலாடுது காத்து
உனக்கு பொறக்கத்தான் ஆச
இல்ல எதுக்கு வளக்கணும் மீச
நித்தம் நிலாவுல இன்பக் கனாவுல
நெனச்சு உருகலாமா
மெத்தை விடாமலும் மெல்ல தொடாமலும்
உனக்கும் எனக்கும் வருமா மாமா
வெரட்டி வெரட்டி ஒதுக்கி தொரத்தி வர
ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும்
தொட்டாச்சிணுங்கி தானா
அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன்
துள்ளும் வால மீனா
இங்கு கண்ணாலம் பண்ணாத
பொண்ணொண்ணு தவிக்கிது மாமா....