Naan Uyara Song Lyrics

நான் உயர உயரப் போகிறேன் பாடல் வரிகள்

Naan Aanaiyittal (1966)
Movie Name
Naan Aanaiyittal (1966) (நான் ஆணையிட்டால்)
Music
M. S. Viswanathan
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா ..வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா ..தா
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா


உயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா
உயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா
நான் மயங்கினாலும் மறந்து விடாமல் நீ தேட வா
நான் மயங்கினாலும் மறந்து விடாமல் நீ தேட வா
என்னை நீ தேட வா
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா .. மடியைத் தா


நீ பக்கத்தில் வர வேண்டும்
நான் பழரசம் தர வேண்டும்
நீ வெட்கத்தை விட வேண்டும்
நான் சொர்க்கத்தைத் தொட வேண்டும்
தாய் தந்தாள் பால் மயக்கம்
தமிழ் தந்தாள் நூல் மயக்கம்
தாய் தந்தாள் பால் மயக்கம்
தமிழ் தந்தாள் நூல் மயக்கம்
நீ தந்தாய் பெண் மயக்கம்
நான் தந்தேன் கண் மயக்கம்

காலம் நேரம் ஜாடையில் சொல்ல
நான் செல்ல ... வா மெல்ல ..
காதல் போகும் பாதையில் நின்று ...
யார் என்று ... பார் இன்று


நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா .. மடியைத் தா
நான் மேலே பறக்கின்றேன்
இந்த உலகத்தை மறக்கின்றேன்
நீ எங்கே இருக்கின்றாய்
நான் அங்கே வருகின்றேன்


மான் என்னும் பேர் அடைந்தேன்
மனம் என்னும் ஊர் அடைந்தேன்
மான் என்னும் பேர் அடைந்தேன்
மனம் என்னும் ஊர் அடைந்தேன்
நீ தந்த நிழல் அடைந்தேன்
நீங்காத நிலை அடைந்தேன்


ஆடை மூடும் பாவையின் கன்னம்
மலர் வண்ணம் மதுக் கிண்ணம்
ஆசை வாழும் காதலர் உள்ளம்
அது கொள்ளும் புது வெள்ளம்
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா .. மடியைத் தா